நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›பண்புடைமை

5.பண்புடைமை

10 குறள்கள்

991விளக்கம் →

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

992விளக்கம் →

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

993விளக்கம் →

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

994விளக்கம் →

யனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

995விளக்கம் →

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

996விளக்கம் →

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

997விளக்கம் →

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

998விளக்கம் →

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

999விளக்கம் →

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

1000விளக்கம் →

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

← சான்றாண்மைநன்றியில்செல்வம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்