நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நாணுடைமை

7.நாணுடைமை

10 குறள்கள்

1011விளக்கம் →

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.

1012விளக்கம் →

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.

1013விளக்கம் →

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.

1014விளக்கம் →

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.

1015விளக்கம் →

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.

1016விளக்கம் →

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.

1017விளக்கம் →

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

1018விளக்கம் →

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

1019விளக்கம் →

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.

1020விளக்கம் →

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

← நன்றியில்செல்வம்குடிசெயல்வகை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்