நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›ஆள்வினையுடைமை

24.ஆள்வினையுடைமை

10 குறள்கள்

611விளக்கம் →

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

612விளக்கம் →

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

613விளக்கம் →

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.

614விளக்கம் →

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

615விளக்கம் →

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

616விளக்கம் →

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

617விளக்கம் →

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.

618விளக்கம் →

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

619விளக்கம் →

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

620விளக்கம் →

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

← மடியின்மைஇடுக்கணழியாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்