நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›இடுக்கணழியாமை

25.இடுக்கணழியாமை

10 குறள்கள்

621விளக்கம் →

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

622விளக்கம் →

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

623விளக்கம் →

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

624விளக்கம் →

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

625விளக்கம் →

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.

626விளக்கம் →

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.

627விளக்கம் →

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.

628விளக்கம் →

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

629விளக்கம் →

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

630விளக்கம் →

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

← ஆள்வினையுடைமை
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்