நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›மடியின்மை

23.மடியின்மை

10 குறள்கள்

601விளக்கம் →

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

602விளக்கம் →

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

603விளக்கம் →

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

604விளக்கம் →

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

605விளக்கம் →

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

606விளக்கம் →

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

607விளக்கம் →

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.

608விளக்கம் →

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

609விளக்கம் →

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

610விளக்கம் →

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

← ஊக்கமுடைமைஆள்வினையுடைமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்