நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›ஊக்கமுடைமை

22.ஊக்கமுடைமை

10 குறள்கள்

591விளக்கம் →

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்

உடையது உடையரோ மற்று.

592விளக்கம் →

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

593விளக்கம் →

க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

594விளக்கம் →

க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

595விளக்கம் →

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

596விளக்கம் →

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

597விளக்கம் →

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

598விளக்கம் →

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

599விளக்கம் →

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

஦வ்ருஉம் புலிதாக் குறின்.

600விளக்கம் →

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.

← ஒற்றாடல்மடியின்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்