நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›ஒற்றாடல்

21.ஒற்றாடல்

10 குறள்கள்

581விளக்கம் →

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

582விளக்கம் →

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.

583விளக்கம் →

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்தது இல்.

584விளக்கம் →

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.

585விளக்கம் →

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

586விளக்கம் →

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.

587விளக்கம் →

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

588விளக்கம் →

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

589விளக்கம் →

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

590விளக்கம் →

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

← கண்ணோட் டம்ஊக்கமுடைமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்