நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›கண்ணோட் டம்

20.கண்ணோட் டம்

10 குறள்கள்

571விளக்கம் →

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

572விளக்கம் →

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

573விளக்கம் →

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

574விளக்கம் →

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

575விளக்கம் →

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்

576விளக்கம் →

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

577விளக்கம் →

கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

578விளக்கம் →

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

579விளக்கம் →

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

580விளக்கம் →

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

← வெருவந்தசெய்யாமைஒற்றாடல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்