நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வெருவந்தசெய்யாமை

19.வெருவந்தசெய்யாமை

10 குறள்கள்

561விளக்கம் →

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

562விளக்கம் →

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

563விளக்கம் →

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

564விளக்கம் →

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

565விளக்கம் →

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

566விளக்கம் →

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

567விளக்கம் →

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

568விளக்கம் →

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறிற் சிறுகும் திரு.

569விளக்கம் →

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

570விளக்கம் →

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

← கொடுங்கோன்மைகண்ணோட் டம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்