நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›கொடுங்கோன்மை

18.கொடுங்கோன்மை

10 குறள்கள்

551விளக்கம் →

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.

552விளக்கம் →

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

553விளக்கம் →

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

554விளக்கம் →

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

555விளக்கம் →

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

556விளக்கம் →

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

557விளக்கம் →

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.

558விளக்கம் →

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.

559விளக்கம் →

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

560விளக்கம் →

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

← செங்கோன்மைவெருவந்தசெய்யாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்