நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›செங்கோன்மை

17.செங்கோன்மை

10 குறள்கள்

541விளக்கம் →

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

542விளக்கம் →

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

543விளக்கம் →

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

544விளக்கம் →

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

545விளக்கம் →

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

546விளக்கம் →

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

547விளக்கம் →

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

548விளக்கம் →

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

549விளக்கம் →

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

550விளக்கம் →

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

← பொச்சாவாமைகொடுங்கோன்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்