நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›பொச்சாவாமை

16.பொச்சாவாமை

10 குறள்கள்

531விளக்கம் →

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

532விளக்கம் →

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

533விளக்கம் →

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

534விளக்கம் →

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.

535விளக்கம் →

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.

536விளக்கம் →

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.

537விளக்கம் →

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

538விளக்கம் →

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

539விளக்கம் →

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

540விளக்கம் →

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.

← சுற்றந்தழால்செங்கோன்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்