நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›சுற்றந்தழால்

15.சுற்றந்தழால்

10 குறள்கள்

521விளக்கம் →

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

522விளக்கம் →

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.

523விளக்கம் →

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.

524விளக்கம் →

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.

525விளக்கம் →

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

526விளக்கம் →

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

527விளக்கம் →

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

528விளக்கம் →

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

529விளக்கம் →

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

530விளக்கம் →

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.

← தெரிந்துவினையாடல்பொச்சாவாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்