நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›தெரிந்துவினையாடல்

14.தெரிந்துவினையாடல்

10 குறள்கள்

511விளக்கம் →

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

512விளக்கம் →

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

513விளக்கம் →

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

514விளக்கம் →

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

515விளக்கம் →

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

516விளக்கம் →

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

517விளக்கம் →

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

518விளக்கம் →

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

519விளக்கம் →

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

520விளக்கம் →

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

← தெரிந்துதெளிதல்சுற்றந்தழால் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்