நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›தெரிந்துதெளிதல்

13.தெரிந்துதெளிதல்

10 குறள்கள்

501விளக்கம் →

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

502விளக்கம் →

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு.

503விளக்கம் →

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

504விளக்கம் →

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

505விளக்கம் →

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

506விளக்கம் →

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

507விளக்கம் →

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.

508விளக்கம் →

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

509விளக்கம் →

தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.

510விளக்கம் →

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

← இடனறிதல்தெரிந்துவினையாடல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்