நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›இடனறிதல்

12.இடனறிதல்

10 குறள்கள்

491விளக்கம் →

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

492விளக்கம் →

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.

493விளக்கம் →

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

494விளக்கம் →

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

495விளக்கம் →

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

496விளக்கம் →

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

497விளக்கம் →

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

498விளக்கம் →

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

499விளக்கம் →

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

500விளக்கம் →

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

← காலமறிதல்தெரிந்துதெளிதல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்