நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›காலமறிதல்

11.காலமறிதல்

10 குறள்கள்

481விளக்கம் →

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

482விளக்கம் →

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.

483விளக்கம் →

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

484விளக்கம் →

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

485விளக்கம் →

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

486விளக்கம் →

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

487விளக்கம் →

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

488விளக்கம் →

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

489விளக்கம் →

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

490விளக்கம் →

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

← அவையஞ்சாமைஇடனறிதல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்