நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›அவையஞ்சாமை

10.அவையஞ்சாமை

20 குறள்கள்

471விளக்கம் →

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

721விளக்கம் →

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

472விளக்கம் →

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

722விளக்கம் →

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

473விளக்கம் →

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

723விளக்கம் →

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

474விளக்கம் →

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

724விளக்கம் →

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

475விளக்கம் →

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

725விளக்கம் →

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

476விளக்கம் →

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

726விளக்கம் →

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

477விளக்கம் →

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

727விளக்கம் →

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

478விளக்கம் →

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

728விளக்கம் →

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

479விளக்கம் →

அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

729விளக்கம் →

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

480விளக்கம் →

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

730விளக்கம் →

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

← அவையறிதல்காலமறிதல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்