நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›நாணுத்துறவுரைத்தல்

6.நாணுத்துறவுரைத்தல்

10 குறள்கள்

1131விளக்கம் →

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.

1132விளக்கம் →

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.

1133விளக்கம் →

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.

1134விளக்கம் →

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

1135விளக்கம் →

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

1136விளக்கம் →

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண்.

1137விளக்கம் →

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

1138விளக்கம் →

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.

1139விளக்கம் →

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

1140விளக்கம் →

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

← காதற்சிறப்புரைத்தல்அலரறிவுறுத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்