நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›அலரறிவுறுத்தல்

7.அலரறிவுறுத்தல்

10 குறள்கள்

1141விளக்கம் →

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

1142விளக்கம் →

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

1143விளக்கம் →

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

1144விளக்கம் →

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

1145விளக்கம் →

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

1146விளக்கம் →

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

1147விளக்கம் →

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.

1148விளக்கம் →

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

1149விளக்கம் →

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.

1150விளக்கம் →

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.

← நாணுத்துறவுரைத்தல்
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்