நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›காதற்சிறப்புரைத்தல்

5.காதற்சிறப்புரைத்தல்

10 குறள்கள்

1121விளக்கம் →

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.

1122விளக்கம் →

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.

1123விளக்கம் →

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம்.

1124விளக்கம் →

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.

1125விளக்கம் →

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

1126விளக்கம் →

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா

நுண்ணியர்எம் காத லவர்.

1127விளக்கம் →

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

1128விளக்கம் →

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.

1129விளக்கம் →

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ் வூர்.

1130விளக்கம் →

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும் இவ் வூர்.

← நலம்புனைந்துரைத்தல்நாணுத்துறவுரைத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்