நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›நலம்புனைந்துரைத்தல்

4.நலம்புனைந்துரைத்தல்

10 குறள்கள்

1111விளக்கம் →

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.

1112விளக்கம் →

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

1113விளக்கம் →

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

1114விளக்கம் →

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

1115விளக்கம் →

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.

1116விளக்கம் →

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

1117விளக்கம் →

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

1118விளக்கம் →

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

1119விளக்கம் →

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

1120விளக்கம் →

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

← புணர்ச்சிமகிழ்தல்காதற்சிறப்புரைத்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்