நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›இரவு

11.இரவு

10 குறள்கள்

1051விளக்கம் →

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.

1052விளக்கம் →

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.

1053விளக்கம் →

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.

1054விளக்கம் →

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

1055விளக்கம் →

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.

1056விளக்கம் →

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

1057விளக்கம் →

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.

1058விளக்கம் →

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.

1059விளக்கம் →

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.

1060விளக்கம் →

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.

← நல்குரவுஇரவச்சம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்