நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நல்குரவு

10.நல்குரவு

10 குறள்கள்

1041விளக்கம் →

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

1042விளக்கம் →

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

1043விளக்கம் →

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.

1044விளக்கம் →

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.

1045விளக்கம் →

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

1046விளக்கம் →

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

1047விளக்கம் →

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.

1048விளக்கம் →

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

1049விளக்கம் →

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

1050விளக்கம் →

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

← உழவுஇரவு →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்