நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›இரவச்சம்

12.இரவச்சம்

10 குறள்கள்

1061விளக்கம் →

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.

1062விளக்கம் →

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

1063விளக்கம் →

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.

1064விளக்கம் →

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.

1065விளக்கம் →

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினிய தில்.

1066விளக்கம் →

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில்.

1067விளக்கம் →

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.

1068விளக்கம் →

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

1069விளக்கம் →

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

1070விளக்கம் →

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.

← இரவுகயமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்