நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›கயமை

13.கயமை

10 குறள்கள்

1071விளக்கம் →

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.

1072விளக்கம் →

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.

1073விளக்கம் →

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

1074விளக்கம் →

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

1075விளக்கம் →

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

1076விளக்கம் →

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

1077விளக்கம் →

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

1078விளக்கம் →

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.

1079விளக்கம் →

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.

1080விளக்கம் →

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.

← இரவச்சம்
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்