நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பெரியாரைப் பிழையாமை

17.பெரியாரைப் பிழையாமை

10 குறள்கள்

891விளக்கம் →

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

892விளக்கம் →

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

893விளக்கம் →

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.

894விளக்கம் →

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.

895விளக்கம் →

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

896விளக்கம் →

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

897விளக்கம் →

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

898விளக்கம் →

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.

899விளக்கம் →

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

900விளக்கம் →

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

← உட்பகைபெண்வழிச்சேறல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்