நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›உட்பகை

16.உட்பகை

10 குறள்கள்

881விளக்கம் →

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.

882விளக்கம் →

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

883விளக்கம் →

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.

884விளக்கம் →

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.

885விளக்கம் →

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.

886விளக்கம் →

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.

887விளக்கம் →

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.

888விளக்கம் →

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி.

889விளக்கம் →

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

890விளக்கம் →

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.

← பகைத்திறந்தெரிதல்பெரியாரைப் பிழையாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்