நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பகைத்திறந்தெரிதல்

15.பகைத்திறந்தெரிதல்

10 குறள்கள்

871விளக்கம் →

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

872விளக்கம் →

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

873விளக்கம் →

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

874விளக்கம் →

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற்று உலகு.

875விளக்கம் →

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

876விளக்கம் →

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல்.

877விளக்கம் →

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.

878விளக்கம் →

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.

879விளக்கம் →

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

880விளக்கம் →

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.

← பகைமாட்சிஉட்பகை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்