நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பகைமாட்சி

14.பகைமாட்சி

10 குறள்கள்

861விளக்கம் →

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.

862விளக்கம் →

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

863விளக்கம் →

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

864விளக்கம் →

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

865விளக்கம் →

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது.

866விளக்கம் →

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.

867விளக்கம் →

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.

868விளக்கம் →

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.

869விளக்கம் →

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

870விளக்கம் →

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.

← இகல்பகைத்திறந்தெரிதல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்