நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›இகல்

13.இகல்

10 குறள்கள்

851விளக்கம் →

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.

852விளக்கம் →

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

853விளக்கம் →

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.

854விளக்கம் →

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

855விளக்கம் →

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.

856விளக்கம் →

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

857விளக்கம் →

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

858விளக்கம் →

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

859விளக்கம் →

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

860விளக்கம் →

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.

← புல்லறிவாண்மைபகைமாட்சி →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்