நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›புல்லறிவாண்மை

12.புல்லறிவாண்மை

10 குறள்கள்

841விளக்கம் →

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.

842விளக்கம் →

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.

843விளக்கம் →

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.

844விளக்கம் →

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.

845விளக்கம் →

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

846விளக்கம் →

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.

847விளக்கம் →

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

848விளக்கம் →

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.

849விளக்கம் →

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

850விளக்கம் →

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

← பேதைமைஇகல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்