நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பேதைமை

11.பேதைமை

10 குறள்கள்

831விளக்கம் →

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.

832விளக்கம் →

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல்.

833விளக்கம் →

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

834விளக்கம் →

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

835விளக்கம் →

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.

836விளக்கம் →

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.

837விளக்கம் →

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

838விளக்கம் →

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

839விளக்கம் →

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.

840விளக்கம் →

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.

← கூடாநட்புபுல்லறிவாண்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்