நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›கூடாநட்பு

10.கூடாநட்பு

10 குறள்கள்

821விளக்கம் →

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை

நேரா நிரந்தவர் நட்பு.

822விளக்கம் →

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

823விளக்கம் →

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.

824விளக்கம் →

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

825விளக்கம் →

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.

826விளக்கம் →

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

827விளக்கம் →

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.

828விளக்கம் →

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

829விளக்கம் →

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

830விளக்கம் →

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.

← தீ நட்புபேதைமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்