நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›தீ நட்பு

9.தீ நட்பு

10 குறள்கள்

811விளக்கம் →

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

812விளக்கம் →

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

813விளக்கம் →

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

814விளக்கம் →

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

815விளக்கம் →

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

816விளக்கம் →

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

817விளக்கம் →

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.

818விளக்கம் →

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.

819விளக்கம் →

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

820விளக்கம் →

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

← பழைமைகூடாநட்பு →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்