நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பழைமை

8.பழைமை

10 குறள்கள்

801விளக்கம் →

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

802விளக்கம் →

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.

803விளக்கம் →

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை.

804விளக்கம் →

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.

805விளக்கம் →

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

806விளக்கம் →

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

807விளக்கம் →

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.

808விளக்கம் →

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.

809விளக்கம் →

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

810விளக்கம் →

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.

← நட்பாராய்தல்தீ நட்பு →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்