நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›நட்பாராய்தல்

7.நட்பாராய்தல்

10 குறள்கள்

791விளக்கம் →

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

792விளக்கம் →

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

793விளக்கம் →

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

794விளக்கம் →

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

795விளக்கம் →

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

796விளக்கம் →

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

797விளக்கம் →

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

798விளக்கம் →

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

799விளக்கம் →

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

800விளக்கம் →

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

← படைச்செருக்குபழைமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்