நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›பெண்வழிச்சேறல்

18.பெண்வழிச்சேறல்

10 குறள்கள்

901விளக்கம் →

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது.

902விளக்கம் →

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.

903விளக்கம் →

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும்.

904விளக்கம் →

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

905விளக்கம் →

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.

906விளக்கம் →

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.

907விளக்கம் →

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.

908விளக்கம் →

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட் டாங்கு ஒழுகு பவர்.

909விளக்கம் →

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ஏவல் செய்வார்கண் இல்.

910விளக்கம் →

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

← பெரியாரைப் பிழையாமைவரைவின்மகளிர் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்