நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›வரைவின்மகளிர்

19.வரைவின்மகளிர்

10 குறள்கள்

911விளக்கம் →

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.

912விளக்கம் →

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.

913விளக்கம் →

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.

914விளக்கம் →

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்.

915விளக்கம் →

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.

916விளக்கம் →

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.

917விளக்கம் →

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.

918விளக்கம் →

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.

919விளக்கம் →

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.

920விளக்கம் →

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.

← பெண்வழிச்சேறல்கள்ளுண்ணாமை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்