பாடல் 2520
ஊர்ந்ததை -- எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை -- தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, . . . .
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை -- கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
பூண்டதை -- சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த . . . .
உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.
அமர்ந்ததை -- புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். . . . .
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும் --
வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.
செவ்வேள்