நூல்கள்›பரிபாடல்›பாடல் 2519

பாடல் 2519

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,

உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை

முற்றுபு முற்றுபு, பெய்து -- சூல் முதிர் முகில்--

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்

குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. . . . .

காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி

மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்

வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,

தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால

கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; . . . .

தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை

வையை

← பாடல் 2518பாடல் 2520 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்