பாடல் 2516
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து -- . . . .
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ --
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?
செவ்வேள்