பாடல் 2506
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, . . . .
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--
பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த
வந்தன்று, வையைப் புனல். . . . .
வையை