நூல்கள்›பரிபாடல்›பாடல் 2505

பாடல் 2505

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்

பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;

நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,

மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,

மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் . . . .

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,

மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல

நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,

மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்

தாயிற்றே தண் அம் புனல். . . . .

வையை

← பாடல் 2504பாடல் 2506 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்