நூல்கள்›புறநானூறு›பாடல் 2495

பாடல் 2495

கீழ் நீரால் மீன் வழங்குந்து;

மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;

கழி சுற்றிய விளை கழனி,

அரிப் பறையாற் புள் ளோப்புந்து;

நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான் . . . .

மென் பறையாற் புள் இரியுந்து;

நனைக் கள்ளின் மனைக் கோசர்

தீந் தேறல் நறவு மகிழ்ந்து

தீங் குரவைக் கொளைத்தாங் குந்து;

உள்ளி லோர்க்கு வலியா குவன், . . . .

கேளி லோர்க்குக் கேளா குவன்

கழுமிய வென்வேல் வேளே;

வளநீர் வாட்டாற்று எழினி யாதன்

கிணை யேம், பெரும!

கொழுந் தடிய சூடு என்கோ? . . . .

வளநனையின் மட்டு என்கோ?

குறு முயலின் நிணம் பெய்தந்த

நறுநெய்ய சோறு என்கோ?

திறந்து மறந்து கூட்டு முதல்

முகந்து கொள்ளும் உணவு என்கோ? . . . .

அன்னவை பலபல .. .. .. .. .. ..

.. .. .. .. .. .. .. .. .. .. .. வருந்திய

இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய

அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;

எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே; . . . .

மாரி வானத்து மீன் நாப்பண்,

விரி கதிர வெண் திங்களின்,

விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!

யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்

நிரைசால் நன்கலன் நல்கி, . . . .

உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!

பாடல்சால் வளன்!

← பாடல் 2494பாடல் 2496 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்