நூல்கள்›புறநானூறு›பாடல் 2493

பாடல் 2493

சிலை உலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,

ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,

வலி துஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,

வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,

உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! . . . .

யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை

ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,

பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை

வாடா வஞ்சி பாடினேன் ஆக,

அக மலி உவகையொடு அணுகல் வேண்டிக், . . . .

கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின்

வெஞ்சின வேழம் நல்கினன், அஞ்சி

யான் அது பெயர்த்தனென் ஆகத், தான் அது

சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும் ஓர்

பெருங்களிறு நல்கியோனே, அதற்கொண்டு, . . . .

இரும்பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்,

துன்னரும் பரிசில் தரும் என

என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.

என்றும் செல்லேன்!

← பாடல் 2492பாடல் 2494 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்