நூல்கள்›புறநானூறு›பாடல் 2491

பாடல் 2491

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்

பசலை நிலவின் பனிபடு விடியல்,

பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை

ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, . . . .

உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,

நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,

அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,

வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் . . . .

வைகல் உழவ! வாழிய பெரிது எனச்

சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,

ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி

வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை

நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் . . . .

தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,

ஊண்முறை ஈத்தல் அன்றியும், கோண்முறை

விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து

அரும்பெறல் அமிழ்த மன்ன . . . .

கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

அமிழ்தம் அன்ன கரும்பு!

← பாடல் 2490பாடல் 2492 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்