நூல்கள்›புறநானூறு›பாடல் 2490

பாடல் 2490

தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்

விண்டு அனைய விண்தோய் பிறங்கல்

முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்

பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற

திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி, . . . .

அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்

வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,

ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்

தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி

நனந்தலை மூதூர் வினவலின், . . . .

முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்

அளியன் ஆகலின், பொருநன் இவன் என,

நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்,

காண்கு வந்திசிற் பெரும, மாண்தக

இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் . . . .

ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்

துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,

நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு,

இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால்

துளிபதன் அறிந்து பொழிய, . . . .

வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

வேலி ஆயிரம் விளைக!

← பாடல் 2489பாடல் 2491 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்