நூல்கள்›புறநானூறு›பாடல் 2488

பாடல் 2488

நீர் நுங்கின் கண் வலிப்பக்

கான வேம்பின் காய் திரங்கக்,

கயங் களியும் கோடை ஆயினும்,

ஏலா வெண்பொன் போகுறு காலை,

எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்! . . . .

என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை;

இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்;

செலினே, காணா வழியனும் அல்லன்;

புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,

குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், . . . .

கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,

செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்!

ஆத னுங்கன் போல, நீயும்

பசித்த ஒக்கல் பழங்கண் வீட,

வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! . . . .

ஐதுஅகல் அல்குல் மகளிர்

நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!

நெய்தல் கேளன்மார்!

← பாடல் 2487பாடல் 2489 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்