நூல்கள்›புறநானூறு›பாடல் 2487

பாடல் 2487

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்

பள்ளம், வாடிய பயன்இல் காலை,

இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்

சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்,

தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை . . . .

இடுக்கண் இரியல் போக, உடைய

கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல்,

நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக,

வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்

பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன் . . . .

வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா,

நாடொறும் பாடேன் ஆயின், ஆனா

மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,

பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை

அண்ணல் யானை வழுதி, . . . .

கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!

நூற்கையும் நா மருப்பும்!

← பாடல் 2486பாடல் 2488 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்